மோடி எதிர்ப்பு
நாம் மோடி மற்றும் பிஜேபி கட்சியை எதிர்க்கும் முறை சரியா ?
நாம் மோடியை எதிர்கிறோமா இல்லை அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றோமா ?
மோடியை அப்பட்டமாக எதிர்ப்பது யார் என்று பார்த்தல் இந்திய முஸ்லிம்கள் காரணம் மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற ஒரு வாதம். இது சரியா தவறா என்பதை நாம் பிறகு விவரிப்போம்.
ஆனால் இவர்கள் மோடியை இதற்கும் முறை சரியா என்று பார்த்தல் அது அடி முட்டாளுக்கு உகந்தது காரணம் இவர்கள் மோடி எதிர்க்கும் முறைதான் !
மோடி என்பவர் பிஜே பி கட்சியின் ஆதரவு பெற்ற பிரதம்பர் மற்றும் அவர்கள் கையில் எடுத்திருக்கும் பெரிய ஆயுதம் என்னவென்றால் இந்து இந்துத்துவா இந்துக்களின் காவலன் என்ற ஒரு பெரிய ஆயுதம். இதை நீங்கள் என்னதான் இந்து இந்துத்துவா வேறு என்றாலும் இந்துக்களின் பெரும்பான்மையினர் மனதில் இந்து இந்துத்துவா என்பது ஒன்றுதான்.
இதை இங்குள்ள முஸ்லீம் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இந்து வேறு இந்துத்துவா வேறு என்று நீங்கள் பிரித்தாளும்.
இது எந்தவகையை சாரும் என்றால் நான் தாயை திட்டவில்லை மகனைத்தான் திட்டுகிறேன் என்று கூறுவதுபோல்தான் இந்து இந்துத்துவா எதிர்ப்பு என்பது.
நம் நாட்டில் 80 % பெரும்பாமையனார் இந்துக்கள் 20 % சிறுபான்மையினர் ஆவர்.
இதில் 20 % சிறுபான்மையினரும் மோடிக்கு எதிராக நின்றாலும் மீதம் உள்ள 80 சதவீத மக்களில் 50 % இந்து மத பற்றுள்ளவன் இந்துக்களுக்காகவே நிற்பான் மீதுள்ள 20% நடுநிலையானவன் உங்கள் பக்கம் முழுமையாக நின்றாள் கூட நீங்கள் எதிர்க்கும் மோடியை முழுமையாக உங்களால் எதிர்க்க முடியாது. காரணம் அந்த 10% நடுநிலை இந்துக்கள் கூட சிலசமயம் சில காரணதிக்காக மோடியை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது.
தமிழ் நாட்டில் பிஜேபி காலூன்ற முடியாத காரணம் 50 வருட திராவிட ஆட்சியின் தாக்கம் தான் தவிர இதில் முசுலிம்கள் பலத்தால் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கு இன்னும் ஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் முசுலீம் நண்பர்கள் பல பெயர் ஒட்டு உரிமை மற்றும் ஒட்டு போடும் நேரத்தில் அவர்கள் தொழில் ரீதியாக வெளியில் செல்வது போன்ற பல காரணங்கள் உள்ளன. அவர்களின் வாக்கு சீட்டு அவர்களின் கைகளில் பெரும்பாலும் கிடைப்பதில்லை இதுவும் ஒரு காரணம்.
ஆகையால் நீங்கள் மோடியை மதம் ரீதியாக எதிர்க்காமல் மோடியை காட்சிரீதியாகவும் அல்லது கொள்கைரீதியாகவும் அவரின் ஆட்சியின் அவலத்தின் ரீதியாகவும் எதிர்ப்பதே சிறப்பு.
முஸ்லிம்கள் செய்யும் பெரும் தவறு மோடி ஒழிக என்பது இந்து ஒழிக எனபது போல் திணிப்பதே முதல் தவறு. நீங்கள் ஒரு மதம் மட்டும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள் அப்படி இருக்கும் பொது மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையுடைவனை இதற்கும் இன்னொரு கட்சியான திமுகாவிற்கு ஆதரவு அளிப்பது நீங்கள் உங்கள் மேல் சாணியை எடுத்து பூசிக்கொள்வதற்கு சமம். ஆகையால் நீங்கள் பி ஜெ பி யை எதிர்க்கின்றோம் என்று கூறிக்கொண்டு திமுகாவை ஆதரிப்பது முட்டாள் தனம். உண்மையான இந்துக்கள் யாரும் திமுகவை ஆதரிக்க மாட்டான்.
ஆகையால் முஸ்லீம் நண்பர்கள் மோடியை மதம் ரீதியாக எதிர்ப்பதை கைவிட்டுவிட்டு அரசியல் ரீதியாக எதிர்க்க முன்வாருங்கள் அப்பொழுதே நீங்கள் சரியான வழிக்கு செல்லமுடியும்.
எழுத்து
D.M.R.ரமேஷ் B.E
வேலூர்